×

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி

சென்னை: அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை மருத்துவர் தீபா நிருபர்களிடம் கூறியதாவது: சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் அரசு யோகா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் யோகா தினத்தை கோவிட் -19 என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் நேற்று யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
அப்போது ஏ அறிகுறிகள், அறிகுறிகள் குறைவாக உள்ளவர்கள், அறிகுறி அதிகமாக உள்ளவர்களுக்கு தனித்தனியாக யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் ஏ அறிகுறிகள் உள்ளவர்களுக்கு தாடாசனம், கட்டிசக்கராசனம், உக்கடாசனம், விருச்சாசனம், புஜங்காசனம் மற்றும் மூச்சு பயிற்சிகள் ஒரு மணி நேரம் அளிக்கப்பட்டது. அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு அரை மணி நேரம் மூச்சு பயிற்சி  அளிக்கப்பட்டது. அறிகுறிகள் அதிகமாக வென்டிலேட்டரில் இருப்பவர்களுக்கு அவர்களுக்கு நேரம் கிடைக்கும் போது யோக முத்ரா பயிற்சி அளிக்கப்பட்டது.  லேசான அறிகுறிகள் இருப்பவர்கள் தினம் முகத்திற்கு ஆவி பிடித்தல், சூரிய வெளிச்சத்தில் 10 நிமிடம் நிற்க வேண்டும்.  தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். இதுவரை 4000 ெகாரோனா நோயாளிகளில் 99% பேர் அதிகமாக தண்ணீர் குடிக்காதவர்களுக்கு தான் வந்துள்ளது.

எனவே அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் ெகாரோனா நோய் வராமல் தடுக்க வகையில் தினம் காலையில் தாடாசனம், உக்கடாசனம், நாடி சுத்திபிராணாயாமம், பிராமரி பிராணாயாமம் இதை தொடர்ந்து செய்தால் கொரோனா நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும் மன தைரியம் வேண்டும். ஆரோக்கியமான உணவு, யோகா பயிற்சிகளை செய்தாலே கொரோனா நோய் தொற்று வராமல் பார்த்து கொள்ள முடியும்.
அப்படி கொரோனா தொற்று வந்தாலும் அதிக பாதிப்பை ஏற்ப்படுத்தாது உடனே சரி செய்து ெகாள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Yoga Practice ,Corona Patients ,Government ,Corona Patients for Yoga Practice , Government Yoga and Nature Hospital, Corona Patients, Yoga Practice
× RELATED நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்