×

கிருஷ்ணகிரி, நீலகிரி பகுதிகளை தொடர்ந்து திருவொற்றியூர் சாத்தாங்காட்டில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: பொதுமக்கள் அச்சம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியில் ஏராளமான வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் படையெடுத்த பாலைவன வெட்டுக்கிளிகளால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். அதை தொடர்ந்து தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நேரலகிரி கிராமத்திலும், நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளிலும் இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் சமீபத்தில் படையெடுத்ததால், அங்குள்ள மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில், சென்னை திருவொற்றியூர் சாத்தாங்காடு மற்றும் ஜோதி நகர் போன்ற பகுதிகளில் கடந்த 2 நாட்களாக ஏராளமான வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன.

இவைகள் அங்குள்ள  செடிகளின் இலைகள் அனைத்தையும் தின்று வருகின்றன. வழக்கத்தை விட வித்தியாசமான  வண்ணத்துடன் பெரிய அளவிலான இந்த வெட்டி கிளிகள் கூட்டம் கூட்டமாக பறந்து வருவதால், அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருவொற்றியூர் மண்டல சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கொரோனா தடுப்பு பணிக்காக தெளிக்கப்படும் கிருமி நாசினியை வெட்டுக்கிளியை மீது அளித்தனர். ஆனால், அந்த வெட்டுக்கிளிகள் சாகவில்லை. இந்த பகுதியில் உள்ள வீடுகளில்  பூச்செடிகள், தோட்டங்கள் இருப்பதால், வெட்டுகிளியால் வீட்டில் இருக்கும் செடி, மரங்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags : Nilgiris ,Thiruvottiyur Chathangadyam ,Krishnagiri ,Thiruvottiyur ,Chattangangal , Krishnagiri, Nilgiris, Thiruvottiyur, Locust
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்