×

பரங்கிப்பேட்டை கடற்கரையில் ஒதுங்கிய சீனமொழியில் எழுதப்பட்ட பார்சல்கள் : 3 கிலோ ஹெராயின் வகை போதைபொருள் இருந்ததால் பரபரப்பு!!

கடலூர் : மகாபலிபுரத்தைச் தொடர்ந்து சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையிலும் சீனமொழியில் எழுதப்பட்ட பார்சல்கள் கரை ஒதுங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரங்கிப்பேட்டை கடற்கரையில் ரோந்துச் சென்ற காவல்துறையினர் சுமார் அரை கிலோ எடைக் கொண்ட 4 பார்சல்களை கைப்பற்றி இருந்தனர். அவற்றின் மேல் சைனீஸ் டீத்தூள் என்று சீன மொழியில் எழுதப்பட்டு இருந்தது. ஆகவே மகாபலிபுரத்தில் கடலில் மிதந்த பார்சல்களை போலவே இதுவும் போதை பொருளாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர்.

ஆகவே 4 பார்சல்களிலும் இருப்பது டீத்தூளா அல்லது போதைப் பொருளா என்பதை உறுதி செய்யும் பொருட்டு, சோதனை கூடத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ய பரங்கிப்பேட்டை காவல்துறையினர் திட்டமிட்டனர். பின்னர் நடத்திய விசாரணையில், போதை பொருளான மெத்தாம்பிடைமின் என்ற ஹெராயின் வகையை சேர்ந்தது இது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 4 பாக்கெட்டுகளிலும் 2 கிலோ 750 கிராம் போதைப்பொருள் இருந்தது.

இவற்றின் இன்றைய சர்வதேச சந்தை விலை பல லட்ச ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இந்த உயர்தர போதைப் பொருள் சீன நாட்டில் இருந்து வந்ததா அல்லது ஆப்ரிக்கா கண்டத்தில் இருந்து வந்ததா, எப்படி கடலில் மிதந்து வந்தது என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.மேலும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் பரங்கிப்பேட்டை பகுதியில் ஊடுருவி உள்ளதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : beach ,Chinese ,vegetation parcels , Beach, secluded, chinese language, parcels, 3kg, heroin, type, drug
× RELATED சீனாவில் உலக பாராபீச் வாலிபால்...