×

கொரோனா ரயில் பெட்டிகளில் ஆயிரம் வசதி இருந்தும் சூட்டை தணிக்க முடியல

புதுடெல்லி: ரயில்வே துறை 5,321 ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்றி மாநில அரசுகளிடம் ஒப்படைப்பதாக அறிவித்தது. அதன்படி டெல்லிக்கு 503, உபிக்கு 372 பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன. மற்ற பெட்டிகள் தயாராக இருந்தாலும் அவற்றை பெற யாரும் தயாராக இல்லை.
இதற்கு காரணம், ரயில் பெட்டிக்குள் இருக்கும் அதிகபட்ச வெப்பம்தான். குளிர்சாதன வசதி இல்லாத பெட்டியை மட்டுமே கொரோனா வார்டாக மாற்ற வேண்டுமென சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதி்ல், பயோ டாய்லெட், ஆக்ஸிஜன் சிலிண்டர், பவர் சாக்கெட், குளியலறை  என எல்லா வசதிகள் இருந்தும் ரயில் பெட்டிக்குள் ஏற்படும் வெப்பத்தை தணிக்க முடியவில்லை.

நாட்டின் பல பகுதிகளில் தற்போது வெயில் காலம் என்பதால் அவ்வாறு மாற்றப்படும் பெட்டிக்குள் 43 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது. இதில் நிச்சயம் நோயாளிகள் தங்க முடியாது. எனவே, மூங்கில் கட்டைகள் கொண்டு வெப்பத்தை தணிப்பது, வெப்பத்தை எதிர்க்கும் பெயிண்ட் அடிப்பது, பெரிய ஷீட் மூலம் கவர் செய்தல் என எந்த முயற்சி எடுத்தாலும் 1 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை மட்டுமே தணிக்க முடிகிறது. சிறிய ரக கூலர்கள் வைத்தாலும் கூட அதிகபட்சம் 3 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை மட்டுமே தணிக்க முடிகிறது. இப்பிரச்வைனயை தீர்க்க, ஐஐடி நிபுணர்கள் முயற்சி செய்கின்றனர்.


Tags : Corona , Corona, Train Boxes
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...