ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட மினியாபோலிசில் மர்ம துப்பாக்கிச்சூடு

மினியோபோலிஸ்:  அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் உள்ள மினியோபோலிசில் கடந்த மாதம் ஜார்ட் பிளாய்ட் என்ற கருப்பினத்தவரை போலீசார் கழுத்தில் மிதித்து கொன்றதால்,  அங்கு போராட்டமும், வன்முறையும் வெடித்தது. இனவெறிக்கு எதிரான இந்த போராட்டம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் மினசோட்டா மாகாணத்தில் மூடப்பட்டு இருந்த பார்கள், ஓட்டல்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், மினியாபோலிசில் நேற்று நடந்த மர்ம துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். 10 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூட்டை நடத்தியது யார் என்பது தெரியவில்லை. பேஸ்புக்கில் வெளியான வீடியோவில், மக்களின் அலறல் சத்தமும், அழுகை குரலும் கேட்கிறது. உள்ளூர் மக்கள் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்படுவதும், அந்த இடத்தில் ரத்தம் சிதறி கிடப்பதும் தெரிகிறது. இது, இனவெறி போராட்டத்துக்கு எதிரானவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Related Stories:

>