×

ராயபுரத்தை தொடர்ந்து தண்டையார்பேட்டையிலும் பாதிப்பு 5,000ஐ தாண்டியது : 15 மண்டலங்களிலும் கொரோனா உக்ரம்; சென்னையில் இன்று மட்டும் 21 பேர் பலி!!

சென்னை, : சென்னை மாநகராட்சியின் 11 மண்டலங்களில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் தற்போது வரை 41172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 221,887 பேர் குணமடைந்துள்ளனர். 601 பேர் உயிரிழந்துள்ளனர். 17,683 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாவட்டங்களை சேர்ந்த 956 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 60.13 சதவீதம், பெண்கள் 39.87 சதவீதம்.

மண்டலம் வாரியாக பார்க்கும்போது, ராயபுரத்தில் 6,288 பேர், தண்டையார்பேட்டையில் 5,116 பேர், தேனாம்பேட்டையில் 4,967 பேர், கோடம்பாக்கத்தில் 4,485 பேர், அண்ணாநகரில் 4,385 பேர், திருவிக நகரில் 3,532 பேர், அடையாறில் 2,435 பேர், வளசரவாக்கத்தில் 1,719 பேர், திருவொற்றியூரில் 1,545 பேர், அம்பத்தூரில் 1,519 பேர், மாதவரத்தில் 1,135 பேர், ஆலந்தூரில் 880 பேர், பெருங்குடியில் 854 பேர், சோழிங்கநல்லூரில் 854 பேர், மணலியில் 381 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் சென்னையில் மேலும் 21 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 5, ஓமந்தூரார் மருத்துவமனையில் 7, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

Tags : zones ,Chennai ,regions ,Corona Ukraine , Chennai Corporation, Resource Development, Raipur, Kodambakkam, Corona
× RELATED சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற...