×

அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

சென்னை: அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிசெய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்த அறிக்கை: தலைமைச் செயலகத்தில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு. எனவே அனைத்து  அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் வீட்டிலிருந்தே பணியாற்றும் ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். அரசு அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும்  அவர்கள் குடும்பத்தினருக்கு ஆயுள்காப்பீடு செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Tags : Thiruvananthapuram ,State employees ,home , Thiruvananthapuram, State employees ,allowed , work from home
× RELATED திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி