×

கடந்த 24 மணி நேரத்தில் 445 பேர் பலி; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.25 லட்சத்தை தாண்டியது; 13,699 பேர் பலி..!!

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,25,282 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 14,821 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 445 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 13,699 பேர் உயிரிழந்த நிலையில் 2,37,196 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,32,075 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6170 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 65,744 பேர் குணமடைந்துள்ளனர். இந்த  வரிசையில் நேற்று வரை 3-வது இடத்தில் இருந்த டெல்லி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  டெல்லியில் 59,746 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 2175 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 33,013 பேர் குணமடைந்துள்ளனர்.  தமிழகம்  3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 59,377 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 757 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 32,754 பேர்  குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மாநில வாரியாக விவரம்:

அசாமில் 5388 பேருக்கு பாதிப்பு; 9 பேர் பலி; 3360 பேர் குணமடைந்தது.
பீகாரில் 7612 பேருக்கு பாதிப்பு; 53 பேர் பலி; 5580 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 406 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 316 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 2275 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 1447 பேர் குணமடைந்தது.

கோவாவில் 754 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 129 பேர் குணமடைந்தது.
குஜராத்தில் 27,260 பேருக்கு பாதிப்பு; 1663 பேர் பலி; 19,349 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 10,635 பேருக்கு பாதிப்பு; 160 பேர் பலி; 5557 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 1186 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 680 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 3172 பேருக்கு பாதிப்பு; 21 பேர் பலி; 1661 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 14,930 பேருக்கு பாதிப்பு; 349 பேர் பலி; 11,597 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 2073 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 1406 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 837 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 134 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 841 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 250 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 44 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 141 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 9 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 211 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 141 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 5160 பேருக்கு பாதிப்பு; 14 பேர் பலி; 3720 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 366 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 140 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 4074 பேருக்கு பாதிப்பு; 99 பேர் பலி; 2700 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 2344 பேருக்கு பாதிப்பு; 27 பேர் பலி; 1500 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 9150 பேருக்கு பாதிப்பு; 137 பேர் பலி; 5618 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 5956 பேருக்கு பாதிப்பு; 82 பேர் பலி; 3382 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 7802 பேருக்கு பாதிப்பு; 210 பேர் பலி; 3731 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 13,945 பேருக்கு பாதிப்பு; 555 பேர் பலி; 8297 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 17,731 பேருக்கு பாதிப்பு; 550 பேர் பலி; 10,995 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 8999 பேருக்கு பாதிப்பு; 106 பேர் பலி; 4331 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 135 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 15 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 11,903 பேருக்கு பாதிப்பு; 515 பேர் பலி; 9015 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில்673 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 425 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 48 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 37 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 88 பேருக்கு பாதிப்பு; 26 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.
சிக்கிமில் 70 பேருக்கு பாதிப்பு; 25 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.

Tags : India , 445 killed in last 24 hours Coronavirus in India exceeds 4.25 lakh; 13,699 people killed.
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!