×

ஒரு பஸ் கூட செல்லாத நிலையில் விஐபிக்கள் பயன்படுத்துவதாக கூறி 1000 கி.மீ. சாலை புதுப்பிப்பு: நெடுஞ்சாலைத்துறையில் நடந்த முறைகேடு அம்பலம்

சென்னை: ஒரு பஸ் கூட செல்லாத சாலைகளை முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் சாலை எனக்கூறி புதுப்பிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டில் மட்டும் 1000 கி.மீ நீள சாலை எடுத்துகொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுபாட்டில் 59 ஆயிரம் கி.மீ சாலைகள் உள்ளது. இந்த சாலைகளை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது, சாலைகளை அகலப்படுத்துவது மற்றும் சாலைகளின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சராசரி ₹3 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அவ்வாறு ஒதுக்கப்படும் நிதியை ெகாண்டு தேர்வு செய்யப்பட்ட சாலைகளை புதுப்பிப்பது, அகலப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் உபகோட்ட அளவில் ₹10 கோடியாவது செல்ல செய்ய வேண்டியுள்ளது. இதனால், புதுப்பித்து 2 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், அந்த சாலைகள் இத்திட்டத்தில் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், பெருகி வரும் போக்குவரத்துக்கேற்ப சாலைகளை அகலப்படுத்த வேண்டியுள்ளது.

ஆனால், வாகனங்கள் வராத சாலைகளில் இந்த திட்டத்தின் கீழ் அகலப்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதாவது, மாவட்ட இதர, மாவட்ட முக்கிய சாலைகளில் தொடர்ந்து மேம்படுத்துவது, அகலப்படுத்துவது போன்ற பணிகளை செய்து கொண்டிருக்கின்றனர். அந்த சாலைகள் காரணமே இல்லாமல் மேம்படுத்துவது, அகலப்படுத்துவதாக புகார் வந்தால் அந்த சாலை முக்கிய பிரமுகர் பயன்படுத்தும் சாலை எனக்கூறி கணக்கு காட்டி விடுகின்றனர். ஆனால், அந்த சாலைகளில் ஒரு பஸ் கூட சென்றிருக்காத நிலையில் அது போன்ற சாலைகள் கூட இந்த திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படுகிறது. சமீபத்தில் மதுரை கண்காணிப்பு பொறியாளர் வட்டத்திற்குட்பட்ட மாவட்ட இதர சாலை, ஊரக பகுதியில் உள்ள சாலைகளை மாவட்ட இதர சாலைகளாக தரம் உயர்த்தி, இது போன்று முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் சாலை எனக்கூறி கணக்கு காட்ட திட்டமிட்டுள்ளனர்.

நடப்பாண்டில் ஒவ்வொரு கோட்டத்திலும் ₹10 கோடிக்கு மேல் பணிகளை எடுத்து இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால், இது போன்று கிராம மற்றும் மாவட்ட இதர சாலைகளை எடுத்து புதுப்பித்து அகலப்படுத்த முடிவு செய்துள்ளனர்.இதே போன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகள் எடுத்து கொாள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்தாண்டில் மட்டும் 1000 கி.மீ நீள சாலைகள் இது போன்று முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் சாலைகள் எனக்கூறி எடுத்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்தும் பட்சத்தில், உண்மைகள் வெட்ட வெளிச்சத்துக்கு வரும் என்று தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : VIPs , bus, passenger, VIPs,1000 km. Road refurbishment
× RELATED அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்:...