×

கடலுக்கடியில் அருங்காட்சியகம்... இலங்கையில் திறந்து வைப்பு!

இலங்கையின் காலி  துறைமுகத்தில் முதன் முறையாக, கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத் தை, கடற்படைத் தளபதி பியால் டி சில்வா, நீருக்கடியில் சென்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 50 அடி ஆழத்தில், கடற்படை வீரர்களால் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில், கான்கிரீட் மற்றும் எஃகால் ஆன பீரங்கி உள்ளிட்ட பண்டைய காலப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்படும் வருவாயை சார்ந்துள்ள இலங்கையில், கொரோனா ஊரடங்கால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் 1 ஆம் தேதி முதல் வெளிநாட்டினர் வருகைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், டச்சு கோட்டையை காண  வரும் அனைவரும், நிச்சயம் இந்த அருங்காட்சியகத்தை கண்டுகளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Museum ,Sri Lanka ,Open , Opening of the Museum, Sri Lanka
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு டன் மஞ்சள் பறிமுதல் மண்டபத்தில் 3 பேர் கைது