×

கல்லணை கால்வாயில் உடைப்பு: தற்காலிகமாக தண்ணீர் நிறுத்தம்

அறந்தாங்கி: புதுக்கோட்டை பகுதியில் கல்லணை கால்வாயில் ஏற்பட்ட உடைப்பால் தற்காலிகமாக தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்காக இந்தாண்டு மேட்டூர் அணையி்ல் இருந்து கடந்த 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 16ம் தேதி கல்லணை திறக்கப்பட்டது. இந்நிலையில், பாசனத்திற்காக கல்லணையி்ல் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று அதிகாலை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்தது. இந்த தண்ணீர் இன்று அதிகாலை புதுக்கோட்டை மாவட்ட எல்லையான மேற்பனைக்காடு அருகேயுள்ள பைங்கால் பகுதிக்கு வந்தபோது கரையின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தண்ணீர் வெளியேற ஆரம்பித்தது. தகவலறிந்து அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் கரையை பார்வையிட்டனர். இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் தண்ணீர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது உடைப்பு சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Break ,tomb canal ,Breakdown , Tomb canal, breakage
× RELATED திருமங்கலம் அருகே குழாய் உடைப்பால்...