×

லாரி ஓட்டுனரின் உதவியால் 40 வருடங்களுக்கு பின்னர் குடும்பத்தோடு இணைந்த 93 வயது மூதாட்டி; குவியும் பாராட்டு

மத்தியப்பிரேதேசம்: 1980-ம் வருடம் மத்திய பிரதேச மாநில லாரி ஓட்டுநர் ஒருவர் வழக்கம் போல் தனது பணியை கவனித்து கொண்டிருக்கையில், சாலையில் பெண் ஒருவர் மிகவும் பரிதாபமாக நிற்பதை கண்டு கடந்து செல்ல மனம் வராமல் அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர் அருகில் சென்று பார்த்த பொழுது, உடம்பில் தேனீக்கள் கொட்டிய நிலையில், வேற்று மாநிலத்தில் இருந்து வந்தவர் போல் தெரியவே தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற லாரி ஓட்டுநர் அவரை கவனித்து வந்துள்ளார். கிட்டத்தட்ட 40 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் அவருடன் நேரத்தை செலவழித்து வந்த லாரி ஓட்டுனரின் குடும்பம் அவர் வாய் வழியே வந்த பர்சபூர் என்ற பெயரை கொண்டு கூகுள் மற்றும் வாட்ஸ் ஆப் உதவியுடன் அவரது குடும்பத்தை ஒரு வழியாக கண்டு பிடித்து விட்டனர்.

பின்னர் அவரது குடும்பத்தாரோடு இணைத்து வைத்துள்ளனர். இது குறித்து பேசிய லாரி ஓட்டுநரின் மகன் இஸ்ரார் கான், நான் சிறுவனாக இருக்கும் பொழுது அவர் வந்தார். வரும்பொழுதே மனநலம் பாதிக்கப்பட்டு வந்திருந்தார். மராத்தி மொழியில் பேசிக்கொண்டு இருப்பார். நாங்கள் அவரை அச்சான் மாசி என பெயரிட்டு அழைத்தோம் என கூறியுள்ளார். இது குறித்து மன நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் பேரன் தெரிவிக்கையில், நாங்கள் ஒரு வருடமாக அவரை தேடி அலைந்தோம். எனது அப்பாவும் இறந்து விட்டார் அவர் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். எங்கள் பாட்டியை இவ்வளவு காலம் பத்திரமாக வைத்திருந்த உங்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.

Tags : truck driver , Larry Driver, Grandfather, Appreciation
× RELATED துடியலூர் அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி