×

சீனாவுக்கு பலமுறை சென்று வந்தும் பயங்கரவாதத்தை ஏன் உங்களால் தடுக்க முடியவில்லை: பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கேள்வி

சென்னை: பிரதமரின் கருத்து ராணுவ அதிகாரிகள், வெளியுறவுத்துறை அறிக்கையிலிருந்து முரண்படுவதாக கமல்ஹாசன் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். சீன ஊடுருவல் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் பேசியது பற்றி கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் உணர்ச்சிகரமாக பதிலளிப்பதை வாடிக்கையாகி உள்ளீர்கள். உணர்வுகளைத் தூண்டி விட்டு தப்பி முயல்வதை பிரதமருக்கு, சகாக்களும் நிறுத்த வேண்டும் எனவும் கூறினார்.  சீனாவுக்கு பலமுறை சென்று வந்தும் பயங்கரவாதத்தை ஏன் உங்களால் தடுக்க முடியவில்லை என பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது செய்திக் குறிப்பில் கூறுகையில் கால்வான் பள்ளத்தாக்கில் நிலவும் பதட்டம் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. கால்வான் பள்ளத்தாக்கே இந்திய பகுதி இல்லை என சீனா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. இந்த நிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் கூறியிருக்கும் கருத்துக்கள் ஜூன் 16-17 தேதிகளில், இராணுவ அதிகாரிகளும், வெளியுறவுத் துறை அமைச்சரின் அறிக்கைகளிலிருந்து முரண்பட்டிருக்கிறது. பிரதமர் பேசி முடித்து 10 மணிநேரம் கழித்து பிரதமர் அலுவலகம் அது அப்படி சொல்லவில்லை என விளக்கவுரை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளும் இதைச் சுற்றி நடக்கும் அரசியலும் வீரர்களின் மன உறுதியை குலைத்து விடும் என்று கவலை கொள்கிறது பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பு. தெளிவான சிந்தனை தேவைப்படும் போதெல்லாம், உணர்வுகளைத் தூண்டி விட்டு தப்பிக்க முயல்வதை பிரதமரும், அவரது சகாக்களும் நிறுத்த வேண்டும். இது ஒருமுறை அல்ல, கடந்த ஆறு ஆண்டுகளில் எந்த ஒரு கேள்விக்கும், சரியான பதில் அளிக்காமல், உணர்ச்சிகரமாக பதிலளிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறீர்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : China , China, Terror, Prime Minister Modi, Kamal Haasan
× RELATED சொல்லிட்டாங்க…