×

கடந்த 48 மணி நேரத்தில் 11 தீவிரவாதிகள் என்கவுண்டர்; காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிக்கு இரையான 3 தீவிரவாதிகள்...!!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தீவிரவாதிகளை களையெடுக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு சில வாரங்களில் மட்டும் தொடர்ச்சியாக இங்கு தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டு  வருகின்றனர். இந்நிலையில், இன்று காஷ்மீரின் ஸ்ரீநகர் ஸாடிபால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து தீவிரவாதிகளை தேடும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.  அப்போது, அவர்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, பாதுகாப்படையினர் நடத்திய தாக்குதலில் காலை 1 தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். தொடர்ந்து, 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதன் மூலம் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிக்கு இரையான தீவிரவாதிகளின்  எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, உயிரிழந்த தீவிரவாதிகளிடமிருந்த ஆயுதங்களை கைப்பற்றிய பாதுகாப்புபடையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் கடந்த 48 மணி நேரத்தில், அவந்திபோரா,  சோபியான் மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல்களில் 11 தீவிவராதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : terrorists ,Kashmir ,militants ,security forces ,gun fire , 11 terrorists encountered in last 48 hours; 3 militants fall prey to security forces' gun fire in Kashmir
× RELATED தீவிரவாதிகள் என நினைத்து 3 அப்பாவி வாலிபர்களை சுட்டுக் கொன்ற ராணுவம்