×

கால்கள் உடைந்த காட்டுமாடு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பெரியகுளம்: பெரியகுளம் அருகே வனப்பகுதியில் கால்கள் உடைந்த நிலையில் நடக்க முடியாமல் கிடந்த காட்டுமாடு வனத்துறையினர் சிகிச்சையளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான கருங்கல்பாறை பகுதியில் உள்ள மாந்தோப்பிற்கு நேற்றுமுன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து கூட்டமாக காட்டுமாடுகள் குடிநீர் குடிக்க வந்தன. இதில் 6 வயதுடைய காளை காட்டு மாடு ஒன்று உயரமான நிலப்பகுதியில் இருந்து தாவியபோது தவறி பள்ளத்தில் விழுந்தது. இதில் காட்டுமாட்டின் முன்னங்கால் இரண்டும் உடைந்த நிலையில் பலத்த காயத்துடன் விவசாயிகள் விளை நிலங்களுக்கு செல்லும் ஓடை சாலையில் நடக்க முடியாமல் படுத்து கிடந்தது.

இதை அறிந்த அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து வனத்துறையினர் நேரில் வந்து ஆய்வு செய்து கால்நடை மருத்துவரின் உதவியுடன் காட்டு மாட்டில் ஒடிந்த கால்களுக்கு சிகிச்சை அளிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கால்நடை மருத்துவர் அழகர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் காட்டுமாடு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக வனச்சரகர் (பொறுப்பு) பழனிக்குமார் தெரிவித்தார்.

Tags : Wounded limbs, legs ,die,treatment
× RELATED மாணவர்கள், நோயாளிகள் நலன் கருதி ரயில்...