×

730 போலீசாருக்கும் மேல் பாதிக்கப்பட்ட நிலையில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கொரோனா

சென்னை: சென்னையில் பணியில் இருந்து 730 போலீசாருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று பெண் இணை ஆணையருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக காவல் துறை இயக்குனர் அலுவலகத்தில் உளவுத்துறை டிஎஸ்பி ஒருவருக்கும், செம்பியம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் விஐபிக்களுக்கு   பாதுகாப்பு அளித்து வந்த இன்ஸ்பெக்டர் உட்பட 23 போலீசாருக்கு நோய் தொற்று உறுதியாகி உள்ளது. சென்னை மாநகர காவல் துறையில் கடந்த வாரம் வரை 730 போலீசாருக்கு ெகாரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழக காவல் துறை இயக்குனர் அலுவலகத்தில் எஸ்பி, 6 டிஎஸ்பி உட்பட 39 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர். 250க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தென்சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண் ஐபிஎஸ் அதிகாரியான இணை கமிஷனர் ஒருவருக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல், சளி, இருமல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் சோதனை செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்துக் கொண்டார். சோதனையின் முடிவுகள் நேற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் பணிபுரிந்தவர்கள் அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர் பணிபுரிந்த இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொரோனா பாதிக்கப்பட்டு குணமாகி வீட்டிற்கு சென்றுள்ள நிலையில் தற்போது ெபண் இணை கமிஷனருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது போலீசார் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Corona ,officer ,IPS , Corona
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...