×

பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு

பொன்னேரி:   தமிழகத்தில் கொரொனா நோய் பரவி வருவதால் இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாதவாறு காவல்துறை, சுகாதாரத் துறை, வருவாய்த்துறை இணைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வையும், பாதுகாப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொன்னேரி பகுதியில் மீஞ்சூர், பொன்னேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 400 அடி சாலை, வல்லூர் 100 அடி சாலை சந்திப்பு, மீஞ்சூர் பேருந்து நிலையம், பொன்னேரி தச்சூர் கூட்டு சாலை, இணைப்பு சாலை, பழவேற்காடு  சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வாகனங்களில் வெளியே செல்லாதவாறு தடுப்பு அமைக்கப்பட்டு காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் சாலையில் தடுப்புகள் அமைத்தது குறித்தும், பொதுமக்கள் நடமாட்டம் குறித்தும் நேற்று திடீரென ஆய்வு செய்தார்.  அப்போது, பொன்னேரி தாசில்தார் மணிகண்டன், உதவி கோட்ட கண்காணிப்பாளர் பவுன்குமார் ரெட்டி, பேரூராட்சி செயல் அலுவலர்கள், சுகாதார துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் ஆகியோர்  உடன் இருந்தனர்.

Tags : Ponneri ,Collector ,Meenjur , Collector's sudden , Ponneri, Meenjur area
× RELATED மீஞ்சூரில் வாலிபர் கொலையான...