×

அதிநவீன துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் டிரோன்: பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை அருகே வெடிபொருட்களுடன் பறந்த பாகிஸ்தானுக்கு சொந்தமான டிரோனை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினார்கள்.  ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், கதுவா மாவட்டத்தில் உள்ள ரதுவா கிராமத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படையினர் அதிகாலை 5.10 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி டிரோன் ஒன்று பறப்பதை கண்டனர். இதனால், உஷாரான வீரர்கள், டிரோனை சுட்டு வீழ்த்தினர். இந்திய எல்லைக்குள் 250 மீட்டர் தூரத்தில்  டிரோன் விழுந்தது.

அதை சோதனை செய்ததில் அதில் அதிநவீன துப்பாக்கி, 7 கையெறி குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் போன்றவை நிரப்பப்பட்டு இருந்தன. இந்த டிரோன், பாகிஸ்தான் பகுதியில் உள்ள ராணுவம் அல்லது தீவிரவாதிகள் முகாமில் இருந்து இயக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.Tags : Pakistani ,Security force ,security forces , Sophisticated rifle, bombs, cross-border Pakistani drone
× RELATED தெலங்கானா- சட்டீஸ்கர் எல்லையில்...