×

சென்னையில் 439 கர்ப்பிணிகள் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்: குழந்தைகளுக்கு பரவுகிறதா என்று ஆய்வு

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 539 கர்ப்பிணிகளில் 439 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு கொரோனா பரவுகிறதா என்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்ைப கட்டுப்படுத்தும் வகையில் அரசு எடுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகள் பலனை தராத காரணத்தால் மீண்டும் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் தற்போது வரை 523 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை, அரசு ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை உள்ளிட்ட 4 மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதில் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 294 பேரில் 252 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 252 பேரில் 187 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட 539 கர்ப்பிணிகளில் 439 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தாயிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா பரவுகிறதா என்று மருத்துவர்கள் ஆய்வு நடத்திவருகின்றனர். குறிப்பாக குழந்தை பிறந்த 3வது நாளில் சோதனை செய்யும் போது கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. எனவே எவ்வாறு கொரோனா பரவுகிறது என்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டுவருகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : women ,Chennai ,infants , chennai , Pregnant, Corona
× RELATED சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் மீது மனைவி போலீசில் புகார்