×

5-வது பருவகாலமாக மாறிய கொரோனா; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது; 13,254 பேர் பலி..!!

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது.  ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,10,461 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 15,413 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 306 பேர்  உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 13,254 பேர் உயிரிழந்த நிலையில் 2,27,756 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 128,205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5984 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 64,153 பேர் குணமடைந்துள்ளனர். இந்த  வரிசையில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 56,845 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 704 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 31,316 பேர்  குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 56,746 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 2112 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 31,294 பேர் குணமடைந்துள்ளனர்.  உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 4904 பேருக்கு பாதிப்பு; 9 பேர் பலி; 3039 பேர் குணமடைந்தது.
பீகாரில் 7533 பேருக்கு பாதிப்பு; 52 பேர் பலி; 5529 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 404 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 316 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 2041 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 1394 பேர் குணமடைந்தது.

கோவாவில் 754 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 129 பேர் குணமடைந்தது.
குஜராத்தில் 26,680 பேருக்கு பாதிப்பு; 1638 பேர் பலி; 18,694 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 10,223 பேருக்கு பாதிப்பு; 149 பேர் பலி; 5128 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 1186 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 680 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 3039 பேருக்கு பாதிப்பு; 21 பேர் பலி; 1568 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 14,536 பேருக்கு பாதிப்பு; 337 பேர் பலி; 11,274 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 1965 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 1335 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 836 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 117 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 777 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 232 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 44 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 140 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 9 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 201 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 138 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 4856 பேருக்கு பாதிப்பு; 12 பேர் பலி; 3534 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 286 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 118 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 3952 பேருக்கு பாதிப்பு; 98 பேர் பலி; 2678 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 2301 பேருக்கு பாதிப்பு; 27 பேர் பலி; 1450 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 8697 பேருக்கு பாதிப்பு; 132 பேர் பலி; 5391 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 5834 பேருக்கு பாதிப்பு; 81 பேர் பலி; 3336 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 7072 பேருக்கு பாதிப்பு; 203 பேர் பலி; 3506 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 13531 பேருக்கு பாதிப்பு; 540 பேர் பலி; 7865 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 16,594 பேருக்கு பாதிப்பு; 507 பேர் பலி; 9995 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 8452 பேருக்கு பாதிப்பு; 101 பேர் பலி; 4111 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 135 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 14 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 11724 பேருக்கு பாதிப்பு; 501 பேர் பலி; 8880 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 656 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 413 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 47 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 36 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 68 பேருக்கு பாதிப்பு; 26 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.
சிக்கிமில் 70 பேருக்கு பாதிப்பு; 25 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.



Tags : Corona ,season ,India , Corona, which became the 5th season; Coronavirus in India exceeds 4 lakh; 13,254 people killed.
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு