×

பிரேசிலில் 10 லட்சம்

சா பவுலோ: பிரேசிலில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்து விட்டது. உலகளவில் கொரோனாவால் இதுவரை 86.85 லட்சம் பேர் பாதித்துள்ளனர். 42.69 லட்சம் பேர் குணமடைந்து உள்ளனர். 4.60 லட்சம் பேர் வரை இறந்துள்ளனர். உலகளவில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் இதுவரை 22.22 லட்சம் பேர் பாதித்தும், 1.19 லட்சம் பேர் இறந்தும், 6 லட்சம் பேர் குணமடைந்தும் உள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் உள்ள பிரேசிலின் பாதிப்பு எண்ணிக்கை நேற்று  10  லட்சத்தை கடந்தது. தற்போது, 10,32,913 பாதிப்புடன் இந்நாடு உலகளவில் 2வது இடத்தில் உள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் இங்கு 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனால், பாதிப்பு எண்ணிக்கை அரசு அறிவித்ததை விட 7 மடங்கு அதிகமாக இருக்கக் கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரம், இங்கு ஒரு நாளைக்கு லட்சத்தில் 14 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதனிடையே, காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்கள், உள்ளூர் பணியாளர்கள் உள்ளிட்ட 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் நேபாள நாட்டின் கூர்கா இனத்தை சேர்ந்த ஊழியர்களே அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வைரசின் புதிய மரபணு மூலக்கூறு
சீனாவில் பீஜிங்கை சேர்ந்த 22 பேர் உள்பட நேற்று புதிதாக 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 7 பேருக்கு அறிகுறியற்ற நோய் தொற்று காணப்படுகிறது. இதில் பீஜிங்கை சேர்ந்த இருவர் அடங்குவர். இதைத் தொடர்ந்து, வைரசின் சமீபத்திய மரபணு வரிசை அங்கிருந்து உலக சுகாதார அமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஹூபெய் நகரில் ஒருவருக்கு மட்டும் வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று முன்தின நிலவரப்படி, பீஜிங்கில் 625 பேருக்கு நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 411 பேர் குணமடைந்துள்ளனர் என்று அந்நாட்டின் தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : Brazil , Corona, Brazil
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...