×

அப்பாவை போல ராணுவ வீரர் ஆவேன்: சீன எல்லையில் உயிரிழந்த பழனியின் மகன் உருக்கம்

தொண்டி: தொண்டி அருகே வீர மரணமடைந்த ராணுவ வீரரின் மகன், ராணுவ வீரராக வர விருப்பம் உள்ளதாக தெரிவித்தார். இந்திய சீன எல்லைப் பகுதியான லடாக்கில் கடந்த 15ம் தேதி ஏற்பட்ட மோதலில், ராமநாதபுரம் மாவட்டம், கடுக்கலூரைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி வீர மரணம் அடைந்தார். அவரது உடல் 18ம் தேதி காலை ராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. பழனிக்கு வானதி தேவி என்ற மனைவி, பிரசன்னா (10) என்ற மகன், திவ்யா (8) என்ற மகள் உள்ளனர்.

பழனியின் மகன் பிரசன்னா கூறுகையில், ‘‘நான் 6ம் வகுப்பு படித்து வருகிறேன். எனக்கு சிறு வயது முதலே ராணுவ வீரர் ஆக வேண்டும் என்ற கனவு உள்ளது. பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற போட்டியில் கூட கார்கில் போர் குறித்து எழுதி பரிசு பெற்றுள்ளேன். இதுகுறித்து எனது அப்பாவிடம் போனில் கூறி பாராட்டும் பெற்றேன். அவரும் நீ பெரியவன் ஆனதும் ராணுவத்தில் சேர்த்து விடுகிறேன் என்றார். ராணுவத்தில் சேர்ந்து நாட்டை பாதுகாப்பதே எனது லட்சியம்’’ என்றார்.
பழனியின் மனைவி கூறும்போது, ‘‘எனது கணவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. நான் ஆசிரியர் பணி தொடர்பான படிப்பு படித்துள்ளதால், அரசு எனக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும்’’ என்றார்.


Tags : soldier ,border ,Chinese ,Palani , soldier , father, Palani's son, who died ,Chinese border
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லைப் பகுதியில்...