×

நேபாளத்தை தொடர்ந்து வங்கதேசத்துக்கும் வலை: வரி சலுகையை வாரி வழங்கியது சீனா

புதுடெல்லி: வங்கதேசத்தை வலைத்து போடும் வகையில், அந்நாட்டின்  97 சதவீத பொருட்களுக்கு சீனா வரி விலக்கு அளித்துள்ளது. இந்திய எல்லைக்குள் இருக்கும் கலபானி, லிம்பியாதுரா, லிபுலேக் உள்ளிட்ட பகுதிகளை தனக்கு சொந்தமானவை என கூறி கடந்த வாரம் நேபாளம் புதிய வரைபடத்தை வெளியிட்டது.  இதன் பின்னணியில் சீனா உள்ளது. இந்நிலையில், கடந்த 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் நடத்தி தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த பதற்றம் இன்னும் தணியவில்லை. இந்நிலையில், இந்தியாவின் அண்டை நாடுகளை தனக்கு ஆதரவாக வலைத்து போடும் முயற்சிகளில் சீனா தீவிரமாக இறங்கியுள்ளது.  

இந்தியாவிடம் கட்டுப்பட்டு இருந்த நேபாளத்தை சமீபத்தில் வலைத்தது போல், தற்போது வங்கதேசத்தையும் ஈர்க்கும் வகையில் நேற்று பல்வேறு சலுகைகளை சீனா அறிவித்துள்ளது. வங்கதேசத்தின்  97 சதவீத பொருட்களுக்கு அது  வரி விலக்கு அளித்துள்ளது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கடந்த மாதம் சந்தித்து பேசினர். அதன் விளைவாக, சீனா இந்த வரி சலுகையை அறிவித்துள்ளது. இலங்கை, பாகிஸ்தான் போன்றவை ஏற்கனவே சீனாவின் கைப்பாவையாக மாறி விட்டன. இப்போது, நேபாளம், வங்கதேசமும் அதன் கைக்குள் சென்றது இந்தியாவுக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது.


Tags : China ,Nepal ,Bangladesh , Nepal, Bangladesh, tax concession, China
× RELATED சிஏஏ விவகாரத்தில் என்னை யாரும்...