×

இழிவான அரசியல் அமித்ஷா பதிலடி

புதுடெல்லி: ‘காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இழிவான அரசியல் செய்கிறார்,’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.
இந்திய - சீன எல்லை விவகாரம், இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ராகுல் காந்தி பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் முன்வைத்து மத்திய அரசை விமர்சித்து வருகிறார். இந்நிலையில், ராகுலின் கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று டிவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘இழிவான அரசியல் செய்யும் ராகுல் காந்திக்கு காயமடைந்த வீரரின் தந்தை ஒரு செய்தியை தெரிவித்துள்ளார். சீனாவின் வீண் சண்டைக்கு எதிராக ஒட்டு மொத்த நாடே ஒன்றிணைந்துள்ளது. வயநாடு எம்பி ராகுல் காந்தி, தேசிய நலனுடனும், ஒற்றுமையுடனும் செயல்பட வேண்டும்,’ என குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன் அமித்ஷா இணைத்துள்ள வீடியோவில், சீன தாக்குதலில் காயமடைந்த ராணுவ வீரர் ஒருவரின் தந்தை பேசுகிறார், அதில், அந்த தந்தை, ‘இந்திய ராணுவம் வலிமையானது. அதனால் சீனாவை தோற்கடிக்க முடியும். ராகுல் காந்தியே நீங்கள் இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். இது சரியானது அல்ல. எனது மகன் நாட்டுக்காக போராடுகிறான். அவன் தொடர்ந்து அந்த பணியை செய்வான். அவன் விரைவில் குணமடைந்து மீண்டும் நாட்டுக்காக சேவை செய்வான், என பேசியிருக்கிறார்.


Tags : Amit Shashi ,Amit Shah , Degrading politics, Amit Shah, retaliation
× RELATED பஞ்சாப் அரசை மிரட்டுகிறார் அமைச்சர்...