×

இந்திய வீரர்கள் ஏன் கொல்லப்பட்டனர்? எங்கு கொல்லப்பட்டனர்?: பிரதமருக்கு ராகுல் 2 கேள்வி

புதுடெல்லி: இந்திய - சீன எல்லையில் கடந்த திங்களன்று 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி இரண்டு கேள்விகளை முன்வைத்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் அனைத்துக் கட்சி கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, சீனாவின் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர்.  இதில் பேசிய பிரதமர் மோடி, “நமது எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவவில்லை. நமது நிலப்பரப்பு எதுவும் ஆக்கிரமிக்கவும் படவில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில், இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியிடம் நேற்று 2 கேள்விகளை கேட்டுள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘நமது பிராந்தியத்திற்குள் யாரும் ஊடுருவவில்லை. இந்திய நிலைகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அப்படி என்றால் நமது இந்திய வீரர்கள்  ஏன் கொல்லப்பட்டனர்? சீனாவின் வலுச்சண்டைக்கு பிரதமர் மோடி இந்திய பிராந்தியத்தை ஒப்படைத்து விட்டார். அந்த இடம் சீனாவுக்கு உரியது என்றால், நமது வீரர்கள் ஏன் கொல்லப்பட்டனர்? எந்த இடத்தில் கொல்லப்பட்டனர்?’ என கூறியுள்ளார்.

Tags : soldiers ,Indian , Indian soldiers, Rahul, question
× RELATED ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வாகனம்: 4 வீரர்கள் படுகாயம்