×

கொரோனா தொற்றை கண்டறிய புதுவகை டெஸ்ட் கிட்: காமராஜர் பல்கலை. பேராசிரியர்கள் அசத்தல்

திருப்பரங்குன்றம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக இயற்பியல் மற்றும் உயிரியியல் தொழில்நுட்ப துறை பேராசிரியர்கள் இணைந்து கொரோனா தொற்றை கண்டறிய புது வகையான டெஸ்ட் கிட் போன்ற கருவியை வடிவமைத்துள்ளனர். இதுகுறித்து பேராசிரியர்கள் கூறுகையில் ‘நானோ தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த கருவி மூலம் கொரானா வைரஸ் தொற்றை கண்டறிய முடியும். மிகச்சிறிய அளவில் இருக்கும் இந்த டெஸ்ட் கிட் மூலம் ஒருவருக்கு ஒருமுறை கொரானா பரிசோதனை செய்ய ரூ.50 மட்டுமே செலவாகும்.

கொரானா வைரஸ் தொற்றை உறுதி செய்ய அதிகபட்சம் ஒரு நிமிடம் மட்டுமே தேவைப்படும். இந்த டெஸ்ட் கிட் கருவியில் ஒருவரின் ரத்தம் அல்லது சளி மாதிரிகளை செலுத்தினால் உடனடியாக நானொ தொழில்நுட்பம் மூலம் வெளிவரும் சிக்னலை வைத்து உடலில் ஏற்பட்டுள்ள கொரானா பாதிப்பை துல்லியமாக கணக்கிட முடியும். குறிப்பாக பிசிஆர் கருவி மூலம் ஒருவருக்கு கொரானா தொற்று உள்ளதா என்பதை மட்டுமே கண்டறிய முடியும். ஆனால் நாங்கள் வடிவமைத்துள்ள இந்த டெஸ்ட் கிட் மூலம் ஒருவரின் உடலில் எந்த அளவு கொரானா தாக்கம் உள்ளது என்பதை அளவிட முடியும்.

அவர்களுக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை தேவையா என்பதையும் உறுதி செய்ய முடியும். மேலும் இந்த டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை செய்ய ஆய்வகம் அமைக்க மிக குறைந்த செலவே ஆகும்’ என்றனர்.

Tags : Kamarajar University ,Professors ,Corona , Corona, Test Kit, Kamarajar University. Professors
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...