×

சாலைகளில் திரியும் குதிரைகளால் வாகன ஓட்டிகள் அவதி

பழநி: பழநியில் சாலைகளில் திரியும் குதிரைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோயில் நகரான திண்டுக்கல் மாவட்டம், பழநிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் இறங்கி, பழநி கோயிலுக்கு செல்ல பயன்படுத்தக் கூடிய அடுத்த வாகனமாக குதிரைவண்டி உள்ளது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் குதிரைவண்டி பயணம் பழநியில் பெரிதும் பிரசித்தி பெற்றவை.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அழிந்துபோன இந்த குதிரைவண்டி தொழில் பக்தர்களின் ஆதரவால் பழநி நகரில் மட்டும் இயங்கி வந்தது. கொரோனா பரவல் காரணமாக பழநி கோயிலில் பக்தர்கள் தரிசனம் 80 நாட்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோயில் நகரான பழநி பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதன்காரணமாக எப்போதும் கேட்கும் குதிரை வண்டிகளின் ஜல், ஜல் சத்தம் தற்போது நிசப்தமாய் உள்ளது.
குதிரைவண்டி உரிமையாளர்களே வாழ்வாதாரமின்றி தவித்து வரும் நிலையில் குதிரைகளை பராமரிப்பது என்பது கேள்விக்குறியான விஷயமாக உள்ளது.

இதனால் வயதான குதிரைகள் பல சாலைகளில் அவிழத்து விடப்பட்டுள்ளன. இதனால் நகர சாலைகளில் ஆங்காங்கு குதிரைகள் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகின்றன. சாலையின் குறுக்கே ஓடுவதால் டூவீலர் ஓட்டுனர்கள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிகுள்ளாகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து சாலைகளில் உணவின்றி சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து பாதுகாக்க முன்வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,roads , Road, Horse, Motorists, Awadhi
× RELATED சேலத்தில் தொடர் மழையால் குண்டும்,...