×

கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கு சொந்தமானது..! சீனாவின் கருத்துக்களை ஏற்க முடியாது: செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா

டெல்லி: கல்வான் பள்ளத்தாக்கின் நிலை வரலாற்று ரீதியாக ஏற்கனவே மிகத் தெளிவாக உள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவிற்கு சொந்தமானது.சீனாவுக்கு சொந்தமானது என கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என அனுராக் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். ஒப்பந்தத்தை மீறி செயல்பட எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனா முயற்சி செய்கிறது எனவும் கூறினார். லடாக்கின் கிழக்கு பகுதியில் சீன ராணுவம் கடந்த மாதம் ஊடுருவியதால் ஏற்பட்ட இருதரப்பு மோதல், தற்போது கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மிகப்பெரும் வன்முறைக்கு காரணமாகி விட்டது.

இதில் இந்தியா தரப்பில் 20 வீரர்களும், சீனா தரப்பில் 35 பேரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனால் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் வகையில் இருநாட்டு ராணுவமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளன. இதைப்போல தூதரக ரீதியாகவும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா ஆன்லைன்மூலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  கல்வான் பள்ளத்தாக்கின் நிலை வரலாற்று ரீதியாக ஏற்கனவே மிகத் தெளிவாக உள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவிற்கு சொந்தமானது. சீனாவுக்கு சொந்தமானது என கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒப்பந்தத்தை மீறி செயல்பட எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனா முயற்சி செய்கிறது எனவும் கூறினார்.

எல்லை நிர்வாகத்தில் பொறுப்பான அணுகுமுறையை பொறுத்தவரை, நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தையும் எங்கள் எல்லைக்குள்ளேயே வைத்துக்கொள்வது என்பதில் இந்தியா மிக தெளிவாக இருக்கிறது. இதைப்போல சீனாவும் அனைத்து நடவடிக்கைகளையும் தங்கள் எல்லைக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். எல்லையில் அமைதியையும், நிலைத்தன்மையையும் பேணுவதன் அவசியம் மற்றும் வேறுபாடுகள் அனைத்தையும் பேச்சுவார்த்தைகள் மூலம் களைவதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி தொடர்பாக பெரிதுபடுத்தப்பட்ட ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை சீனா கூறுகிறது.

Tags : Anurag Srivastava ,Kalvan Valley ,India ,China , Calvan Valley, India, China, Anurag Srivatsava
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...