மீன்களால் கொரோனா பரவுகிறதா? : சால்மன் மீனா, வேண்டவே வேண்டாம் என அலறி அடித்து ஓடும் சீன மக்கள்!!

பெய்ஜிங் :  சால்மன் மீனா, வேண்டவே வேண்டாம் என கூறும் அளவுக்கு சீன மக்களை கொரோனா அலற வைத்துள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் ஜின்பாடி என்ற மொத்த சந்தை உள்ளது. இதில் சீனர்களின் பிரியமான மீனான சால்மன் மீன் வகைகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். சீனர்களுக்கு பிடித்தமான மீன் என்பதால் ஆஸ்திரேலியா, சிலி, பாரோ தீவுகள், நார்வே ஆகிய பகுதிகளில் இருந்து சீனா இறக்குமதி செய்து வந்தது.ஆனால் தற்போது இந்த மீன்களைக் கண்டாலே சீனர்கள் அலறியடித்து ஓடுகின்றனர்.

காரணம் கடந்த வாரம் ஜின்பாடி மீன் சந்தையின் சால்மன் மீன்களை வெட்டும் பலகைகளில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது தான். இதையடுத்து பீஜிங் நகரில் 2-வது அலை பரவத்துவங்கி இருப்பதால் சால்மன் மீனை வாங்கிட தற்போது ஆள் இல்லை. இதையடுத்து பீஜிங் நகர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கட்டு இருக்கிறது.மேலும் சூப்பர் மார்கெட்டுகள், ஹோட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் இருந்து சால்மன் மீன்களை அவசர,அவசரமாக அப்புறப்படுத்தி வருகின்றனராம்.

Related Stories: