×

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதன் அவசியத்தைப் புரிந்து கொண்டு காக்கை, குருவிகள் கூட வெளியில் வரவில்லை : ராமதாஸ் ட்வீட்!!

சென்னை : கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வருகிற ஜூன் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இது, நேற்று முன்தினம் நள்ளிரவு அமலுக்கு வந்தது. நேற்று காலையில் ஓரளவு கடைகள் திறந்திருந்தன. ஆனால் 10 சதவீதம் மட்டுமே வாகனங்கள் இயங்கின. இரண்டு நாட்களாக முழு ஊரடங்கால் சென்னை முழுவதுமாக முடங்கியது.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சபாஷ்....!சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதன் அவசியத்தைப் புரிந்து கொண்டு காக்கை, குருவிகள் கூட கூடுகளை விட்டு வெளியில் வரவில்லை. மக்களும் சாலைகளுக்கு வரவில்லை. இது வரவேற்கப்பட வேண்டிய மாற்றம்! சென்னை மக்களின் இந்தக் கட்டுப்பாடு அடுத்த இரு வாரங்களுக்கு நீடித்தால், அரசின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்தால் அடுத்த சில வாரங்களில் கொரோனா இல்லாத சென்னை மலர்வது உறுதி! எனத் தெரிவித்துள்ளார்.


Tags : Ramadas ,Chennai , Chennai, Corona, Ramadas, Tweet
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக...