×

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி....! புதுச்சேரியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி நாளை அறிவிக்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். அரசு விதிக்கும் கடும் கட்டுப்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று  புதுச்சேரி முதல்வர் கூறியுள்ளார். உள்துறை அமைச்சகம் அனுமதியளித்தவுடன் இந்த மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இன்று ஒரே நாளில் 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் 339 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும், இது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தவுடன் இந்த மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் நாராயணசாமி கூறினார். கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், புதுச்சேரி சட்டசபை வளாகத்திற்குள் பொதுமக்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சரியான காரணங்கள் இல்லாமல் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் அலுவலகத்திற்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் முன் அனுமதி பெற்றால் மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Corona ,Puducherry ,Narayanasamy Corona ,CM Narayanasamy , Corona, Puducherry, Controls, Chief Minister Narayanasamy
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு