திருப்பத்தூர் அருகே செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் அழிப்பு: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அதிரடி

திருப்பத்தூர்:திருப்பத்தூரில் உள்ள பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு ஆய்வாளர் பழனிச்சாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, திருப்பத்தூர் தண்டபாணி கோயில் தெருவில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தார்.

மேலும், அதே பகுதியில் உள்ள கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான உணவு தின்பண்டங்களை பறிமுதல் செய்தார். தொடர்ந்து, திருப்பத்தூர் பழ மண்டியில் ஆய்வு செய்தார். அப்போது, கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த சுமார் அரை டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தார்.

Related Stories:

>