ராணிப்பேட்டை மாவட்ட கல்வி அலுவலகம் முன் பணியும், நிவாரணமும் கேட்டு இரவு காவலர் குடும்பத்துடன் தர்ணா

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட கல்வி அலுவலகம் முன் பணியும், நிவாரணமும் கேட்டு நேற்று இரவு காவலர் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார். திமிரி வரதா ரெட்டி தெருவை சேர்ந்தவர் வெற்றிவேலன்(43), இவர் கடந்த 2003ம் ஆண்டில் திமிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் இரவு காவலராக மாத தொகுப்பு ஊதியம் 500க்கு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு முதல் இவருக்கு வருகை பதிவேடு, ஊதியம் வழங்கப்படவில்லையாம். மேலும், இவருக்கு பதிலாக வேறு ஒருவரை இரவு காவலராக கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆயிரத்து 500 சம்பளத்தில் நியமிக்கப்பட்டார். இதனால் குடும்பத்துடன் வறுமையில் கடந்த 8 ஆண்டுகளாக வெற்றிவேலன் சிக்கி தவித்து வருகிறாராம். இதுகுறித்து, திமிரி பள்ளி தலைமை ஆசிரியர், கலெக்டர், மாவட்ட கல்வி அலுவலருக்கும் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

மேலும், சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அப்போது இருந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் சுப்பிரமணியன், அமுதா ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். ஆனால் நான் பணி செய்த சம்பளம் மற்றும் வேலையோ நிவாரண உதவியும் இதுவரை வழங்கவில்லை. எனவே பணியும், நிவாரணமும் வழங்க வேண்டும் என்று கூறி வெற்றிவேலன் தனது குடும்பத்துடன் நேற்று தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது, அலுவலகம் மூடப்பட்டிருந்தது. இருந்தும் தொடர்ந்து, தர்ணாவில் ெவற்றிவேலன் தனது குடும்பத்துடன் ஈடுபட்டு வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>