×

கடமலை மயிலை ஒன்றியத்தில் தேங்காய் விலை குறைவு

வருஷநா: கடமலை மயிலை ஒன்றியத்தில் தேங்காய் விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திறகுட்பட்ட அண்ணாநகர், அய்யனார்புரம், கொம்புகாரன்புலியூர் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை வருசநாடு தங்கம்மாள்புரம் சிங்கராஜபுரம் குமணன்தொழு உள்ளிட்ட பகுதிகளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது.கடந்த மூன்று மாத காலமாக தேங்காய் ஒன்றுக்கு ரூ.9 முதல் ரூ.10 வரை விலை போய்க்கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் கூலி தொழிலாளிகளுக்கு மட்டுமே விளைச்சல் சரியாக உள்ளது.

தென்னை மரங்களுக்கு செலவு செய்வது, உழவடை செய்வது போன்ற பணிகளுக்கு தேங்காய் விளைச்சல் உகந்ததக அமைவதில்லை. இது சம்பந்தமாக தேங்காய் வியாபாரம் மிகவும் மந்தம் அடைந்து வருவதாகவும் புலம்பி வருகின்றனர். இந்நிலையில் கடமலை மயிலை ஒன்றியம் வருசநாடு பகுதியில் இருந்து ஒவ்வொரு நாளும் 10க்கும் மேற்பட்ட லாரிகளில் தேங்காய் காங்கேயம், திருச்சி சென்னை கொல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களுக்கு சென்று கொண்டிருந்த நிலைகளில் தற்போது மிகவும் பாதிப்படைந்துள்ளது. எனவே தேங்காய் விளைச்சலும் குறைவாக உள்ளது, விலையும் குறைவாக உள்ளது என விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயி ராமசாமி கூறுகையில், ‘அரசு நிர்ணயித்த விலை கிடைக்க  கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்



Tags : Kadamalai , Coconut ,prices ,low ,Kadamalai ,
× RELATED கடமலை அருகே கிணறு பைப்லைனை சேதப்படுத்திய யானைகள்