×

ஒரே இடத்தில் வெவ்வேறு கி.மீ. காட்டும் மாநில நெடுஞ்சாலைத்துறை போர்டு: வாகன ஓட்டிகள் குழப்பம்

உடுமலை: ஒரே இடத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை வைத்துள்ள வழிகாட்டி போர்டில், குமரலிங்கத்தில் இருந்து பழனிக்கு வெவ்வேறு கி.மீ. குறிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் குழப்பமடைகின்றனர்.உடுமலை-பழனி தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றாக குமரலிங்கம் வழியாக பழனிக்கு மாநில நெடுஞ்சாலைத்துறையின் சாலை செல்கிறது. இந்த வழியாக தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக பழனியில் இருந்து ஆனைமலை செல்லும் வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றன. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சாலையில் வாகனப் போக்குவரத்து குறைவாக உள்ளது.மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் குமரலிங்கத்தில் வழிகாட்டி போர்டு வைக்கப்பட்டுள்ளது. பழைய மற்றும் புதிய போர்டுகள் அருகருகே உள்ளன. இந்த 2 போர்டுகளிலும் உள்ள கி.மீ. வித்தியாசமாக உள்ளது.

அதாவது, ஒரு போர்டில் குமரலிங்கத்தில் இருந்து பழனிக்கு 26 கி.மீ. தூரம் என்றும், மற்றொரு போர்டில் 22 கி.மீ. என்றும் குறிக்கப்பட்டுள்ளது.இரண்டுமே மாநில நெடுஞ்சாலைத்துறை வைத்துள்ள போர்டுகள்தான். இதனால் வாகன ஓட்டிகள் குழப்பமடைகின்றனர். இந்த போர்டுகளை மாற்றி சரியான கி.மீ. தூரத்தை ஒரே மாதிரி எழுத வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Motorists ,State Highway Board ,showing , Different ,km , place, Showing,Motorists, Confused
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...