×

குமரியில் 3வது நாளாக கடல் சீற்றம் கடற்கரையை அழகுபடுத்தும் பணி முடக்கம்

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி கடற்கரையை அழகுபடுத்துவதற்காக ₹9 கோடியில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதில் சூரிய உதயத்தை சுற்றுலா பயணிகள் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கை வசதி மற்றும் திரிவேணி சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் இறங்கி குளிப்பதற்கு வசதியாக கருங்கற்களால் படிக்கட்டுகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.இதில் சூரிய உதயத்தை பார்ப்பதற்காக அமைக்கப்படும் இருக்கைகள் கட்டுமான பணி 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. ஆனால் கடலில் இறங்கி குளிப்பதற்கு வசதியாக படிக்கட்டுகள் கட்டும் பணி கடல் அலையால் தடைபட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் 3வது நாளாக நேற்றும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடலில் ராட்சத அலைகள் எழும்பி பயணிகளை அச்சுறுத்தி வருகிறகிறது.இந்த நிலையில் கடற்கரையில் நடந்து வரும் படிக்கட்டுகள் கட்டுமான பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



Tags : outbreak ,Kumari ,Maritime Outbreak , Maritime, outbreak ,Kumari ,3 days
× RELATED ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விலை கிடு...