×

எடப்பாடிக்கு பணிந்தாரா சூரப்பா.....! கொரோனா சிகிச்சைக்காக மாணவர் விடுதியை தருவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புதல்

சென்னை: கொரோனா சிகிச்சைக்காக மாணவர் விடுதியை தருவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகத் தலைநகர் சென்னையில் தினந்தோறும் 1000-க்கும் அதிகமான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதற்கிடையே சென்னை மாநகராட்சி தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு கல்வி நிறுவனங்கள் தனிமைப்படுத்தல் முகாம்களாகவும் மருத்துவ சிகிச்சை மையங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா மருத்துவ முகாம் அமைக்க குறிப்பிட்ட காலத்துக்குள் அண்ணா பல்கலைக்கழக விடுதிகளை ஒப்படைக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு சென்னை மாநகராட்சி கடிதம் அனுப்பியது. மாணவர்களின் உடைகள், உடமைகள் இருப்பதால் கொரோனா சிகிச்சைக்காக விடுதியை தர முடியாது என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது. விடுதிக்கு பதில் ஆடிட்டோரியம், 300 படுக்கை வசதி உள்ள 2 புதிய கட்டடங்களை தர தயார் என பல்கலைக்கழகம் தெரிவித்தது. இதனை அடுத்து கொரோனா சிகிச்சைக்கு இடத்தைத் தர வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு  தமிழக அரசு உத்தரவிட்டது. கொரோனா சிகிச்சைக்கு கல்வி நிறுவனங்கள் இடத்தை வழங்காவிட்டால் சட்டப்படி கைப்பற்றப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்தது. பேரிடர் மேலாண்மைச் சட்டப்படி தேவையான இடங்களை கையகப்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை எச்சரித்தது.

இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்காக மாணவர் விடுதியை தருவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. பல்கலைக்கழகம் சம்மதித்ததை அடுத்து மாணவர் விடுதியில் சிகிச்சை முகாம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. விடுதியில் உள்ள மாணவர்களின் உடமைகளை ஒரே அறையில் பத்திரமாக வைக்கத் திட்டமிட்டுள்ளனர். சென்னை அண்ணா பல்கலை-யில் கொரோனா மையம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அண்ணா பல்கலையில் உள்ள 600 படுக்கைகளை 1600 ஆக அதிகரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே வெளிமாநிலங்களில் இருந்து வந்த 600 பேர் பல்கலை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Vangandara Surappa ,Edapady ,Anna University ,Student Leave for Corona Treatment Edapady ,Pandanda Surappa , Edappadi, Surappa, Corona, Student Hostel, Anna University
× RELATED பி.எப்.நிதி பாக்கி உத்தரவுக்கு எதிராக அண்ணா பல்கலை. மேல்முறையீடு