×

ஏழைகள் நல்வாழ்வுக்கான ரூ.50,000 கோடியில் வேலைவாய்ப்பு முகாம்; காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...!

டெல்லி: ஏழைகள் நல்வாழ்வுக்கான கரிப் கல்யாண் அபியான் என்ற வேலைவாய்ப்பு முகாமை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக இருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் 25ம்  தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தற்போது 5-வது முறையாக வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஊரடங்கால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இதனால் உண்ண  உணவு, தங்க இடம் எதுவுமின்றி, உயிர்பிழைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்த அவர்கள், நடந்தாவது, ஊருக்கு சென்றுவிடலாம் என்று நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தினமும் சொந்த ஊர்களுக்கு கிளம்பி  வருகின்றனர். இருப்பினும், மத்திய, மாநில அரசுகள் சார்பில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

தொடர்ந்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளுக்கான மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வகையில், ஏழைகள் நல்வாழ்வுக்கான கரிப் கல்யாண் அபியான் என்ற வேலைவாய்ப்பு முகாம்  உருவாக்கப்பட்டுள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஊரக வேலை வாய்ப்புக்காக திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம், பீகார், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட், ஒடிசாவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த  திட்டமானது, நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் ரூ.50,000 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த மாவட்டங்கள் அனைத்தும் ஊரடங்கு காலத்தில் 25,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பெற்றுள்ளன. நாட்டின்  கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கும் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் 25 வகையான படைப்புகளை தீவிரப்படுத்தி இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.

முக்கிய பணிகளாக கிராம அபிவிருத்தி, பஞ்சாயத்து ராஜ், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், சுரங்கங்கள், குடிநீர் மற்றும் சுகாதாரம், சுற்றுச்சூழல், ரயில்வே, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, புதிய மற்றும்  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எல்லை சாலைகள், தொலைத்தொடர்பு மற்றும் விவசாயம் இடம் பெற்றுள்ளன. கிராமப்புற இந்தியாவில் வாழ்வாதார வாய்ப்புகளை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டம், “வேலை வாய்ப்புகளை  அதிகரிப்பதோடு நீடித்த உள்கட்டமைப்பையும் உருவாக்கும்” என்று ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் உள்ள தெலிகர் கிராமத்தில் இந்த திட்டத்தின்கீழ் நடைபெறும் பணியை டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பின்னர்  உரையாற்றிய பிரதமர் மோடி, லடாக்கில் இந்திய வீரர்களின் தியாகத்தால் நாடே பெருமை கொள்கிறது. இன்று நான் பீகார் மக்களுடன் பேசும்போது, வீரம் பீகார் ரெஜிமென்ட்டைச் சேர்ந்தது என்று கூறுவேன், ஒவ்வொரு பீகாரியும் அதைப் பற்றி  பெருமிதம் கொள்கிறது. தேசத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த துணிச்சல்களுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன் என்றார். 


Tags : Modi ,employment camp ,poor , 50,000 crore employment camp for the poor; Prime Minister Modi ..
× RELATED பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை!