×

மனித குலத்தை அச்சுறுத்தும் கொரோனா : சென்னையின் 15 மண்டலங்களிலும் ஆக்ரோஷ ஆட்டம் ; மாநகரில் இன்று மட்டும் 25 பேர் பலி!!

சென்னை:  சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 5,981 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38,327 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 21,098 பேர் குணமடைந்துள்ள நிலையில் 529 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 60.08% பேர் ஆண்கள், 39.91% பெண்கள் ஆவர். 0.01% திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜூன் 20ம் தேதி நிலவரப்படி, சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு தொற்று என்பதை மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டது.அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம்.

ராயபுரம் – 5,981
கோடம்பாக்கம் – 4,149
திரு.வி.க நகரில் – 3,356
அண்ணா நகர் –3,972
தேனாம்பேட்டை – 4,652
தண்டையார் பேட்டை –4 ,869
வளசரவாக்கம் – 1,638
அடையாறு – 2,204
திருவொற்றியூர் – 1,434
மாதவரம் – 1,046
பெருங்குடி – 762
சோளிங்கநல்லூர் – 723
ஆலந்தூர் – 808
அம்பத்தூர் – 1,374
மணலி –  547

மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட 812 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்துள்ளது. ஸ்டான்லி, ஓமந்தூரார், ராஜீவ் காந்தி மருத்துவமனைகளில் தலா 5 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். ரயில்வே மருத்துவமனையில் 3 பேர், கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 2 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : zones ,Chennai ,Corona ,city ,game , Chennai Corporation, Resource Development, Raipur, Kodambakkam, Corona
× RELATED அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர்...