×

கொரோனா தொற்றுநோயின் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளோம்.. உலக நாடுகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நேரம் இது : WHO

வாஷிங்டன் : கொரோனா தொற்றுநோயின் புதிய மற்றும் அபாய கட்டத்தை உலக நாடுகள் எட்டி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும்  அதிகமானோருக்கு தொற்று உறுதியாகி இருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த அளவில் பாதிப்பு எண்ணிக்கை கூடியிருப்பது இதுவே முதல் முறையாகும். அமெரிக்கா, தெற்கு ஆசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா மிகத் தீவிரமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது சவாலாக இருப்பதாக கூறியுள்ள அநத அமைப்பு, உலக நாடுகள் விழிப்புடன் செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவேளியை கடைபிடிப்பது, கைகளை கழுவுவதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு வலியறுத்தி உள்ளது. மக்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அந்த அமைப்பு, உலக நாடுகள் பொருளாதாரத்தை மீட்க ஆர்வம் காட்டுவதாகவும் ஆனால் அதே நேரம் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருவதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. சீன தலைநகர் பெய்ஜ்ங்கில் மற்றும் ஆஸ்திரேலியாவில் கொரோனா 2வது அலை உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 87 லட்சத்துக்கு 58 ஆயிரத்தை கடந்துள்ளது. 4 லட்சத்து 62 ஆயிரம் பேர் கொரோனா வைரஸுக்கு பலியாகி இருக்கின்றனர்.


Tags : corona epidemic , Corona, Epidemic, Dangerous, Grid, World Countries, Awareness, WHO
× RELATED இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு...