×

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிப்பு: அரசு உத்தரவு

சென்னை :  சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிக்காக சென்னையின் 15 மண்டலங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான குழுவினர் அமைக்கப்பட்டிருந்தனர்.


கடந்த 17ம் தேதி ஆலந்தூர் மண்டலத்தில் அருங்காட்சியக கமிஷனர் சண்முகம், பெருங்குடி மண்டலத்தில் கோஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் வெங்கடேஷ், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் இயக்குனர் கருணாகரன், ராயபுரம் மண்டலத்தில் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை (நிலஎடுப்பு) மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரயா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக ஆலந்தூர் மண்டலத்தில் தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரிய இணை இயக்குனர் நிர்மல்ராஜ், தொழிற்சாலை வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்படுத்துதல் அமைப்பு செயல் இயக்குனர் அனீஸ் சேகர், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக செயல் இயக்குனர் விஷ்ணு, ராயபுரம் மண்டலத்தில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்  (சென்னை நிலஎடுப்பு) பால சுப்பிரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு பதில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தேனாம்பேட்டை மண்டலத்துக்கு நில நிர்வாக சீர்திருத்தத்துறை இயக்குனர் சந்திரசேகர் சாஹாமூரிக்கு பதில் உள்துறை இணை செயலாளர் மணிகண்டன், வளசரவாக்கம் மண்டலத்துக்கு சம்ஹாரா சிக்‌ஷா திட்ட கூடுதல் இயக்குனர் வெங்கடேஷ் பதில் சென்னை குடிநீர் வடிகால் வாரிய செயல் இயக்குனர் பிரபுசங்கர், பெருங்குடி மண்டலத்துக்கு தொழிற்சாலை வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்படுத்துதல் அமைப்பு செயல் இயக்குனர் அனீஸ் சேகர் பதில் தமிழ்நாடு உப்பு கழக மேலாண்மை இயக்குனர் அமுதவல்லி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், பெருங்குடி மண்டலத்துக்கு கடந்த 17 தேதி தான் அனீஸ் சேகர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 3 நாட்களில் அவர் மீண்டும் மாற்றப்பட்டுள்ளார்.

Tags : IAS officers ,TN Govt ,Chennai , TN Govt,IAS officers,Chennai
× RELATED காஞ்சிபுரம், கோவையை தொடர்ந்து சென்னை...