×

குண்டாசில் ரவுடி கைது

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அடுத்த சோழியம்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன்  (26). பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஆரம்பாக்கம், சிப்காட், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, ஆந்திர மாநிலம் சிக்காட்டூர் ஆகிய காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.  இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்  மகேஸ்வரி ரவிக்குமார், நேற்று மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது  செய்ய  உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். தொடர்ந்து மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.  


Tags : Rowdy ,Gummidipoondi , Gummidipoondi,gundas ,Rowdy
× RELATED குண்டர் சட்டத்தில் ரவுடி கைது