கஞ்சா கடத்திய வாலிபர் கைது

புழல் : செங்குன்றம் எம்.ஏ.நகர், ஜிஎன்டி சாலை சோதனைச் சாவடியில் நேற்று  முன்தினம் நள்ளிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி 2 பைக்குகளில் வந்த 4 பேரை மடக்கினர். இதில், ஒரு பைக்கில் வந்த வாலிபர் பிடிபட்டார். மற்றொரு பைக்கில் வந்த 3 பேர் தப்பினர். பிடிபட்ட வாலிபரின் பைக் பெட்டியை சோதனை செய்தபோது அதில், ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், ஆவடி மேற்கு காந்தி நகர் பெரியார் தெருவை சேர்ந்த கவுதம் (27) என்பது தெரியவந்தது. இவரும், மற்றொரு பைக்கில் தப்பிய 3 பேரும் நண்பர்கள்.

இவர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் வேலை செய்வதும், நேற்று முன்தினம் இரவு கும்மிடிப்பூண்டியில் லாரி டிரைவர் சுரேஷ் என்பவரிடம் ₹15 ஆயிரம் கொடுத்து ஒன்றரை கிலோ கஞ்சா வாங்கியதும் தெரியவந்தது.  இதைத்தொடர்ந்து, அவரிடம் இருந்து பைக் மற்றும் ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து செங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவுதமை கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய 3 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

Related Stories:

>