×

செங்கல்பட்டில் பரபரப்பு நகராட்சி கமிஷனர் உள்பட2 பேருக்கு கொரோனா: அதிகாரிகள் பீதி

சென்னை : செங்கல்பட்டு நகராட்சி கமிஷனர் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், அதிகாரிகள் பீதியடைந்துள்ளனர். செங்கல்பட்டு நகராட்சியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை 6 பேர் இறந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நகரில் கொரோனா பரவலை தடுக்க பூந்தமல்லி நகராட்சி கமிஷனராக இருந்த டிட்டோ, கடந்த 2 மாதங்களுக்கு முன் செங்கல்பட்டு கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைதொடர்ந்து, நகராட்சியின் 33 வார்டுகளிலும், தீவிரமாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கமிஷனர் டிட்டோ, கடந்த 2 நாட்களாக காய்ச்சல் காரணமாக பணிக்கு வரவில்லை. அதேபோல்ா, செங்கல்பட்டு நகராட்சியில் இளநிலை உதவியாளராக உள்ள லிடியா செல்வக்குமாருக்கும் காய்ச்சல் இருந்தது. அவர்கள் 2 பேரது ரத்தமாதிரி பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. நகராட்சி கமிஷனருக்கு கொரோனா உறுதியானதால், பொதுமக்களும், நகராட்சி ஊழியர்களும் கலக்கம் அடைந்துள்ளனர். இதற்கிடையில், கமிஷனர் டிட்டோ நேற்று செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் தலைமையில் நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார். அவருடன் செங்கல்பட்டு ஆர்டிஓ செல்வம், கலெக்டர் அலுவலக ஊழியர்கள், நகராட்சி ஊழியர்கள் 20 பேர் கலந்துகொண்டனர். இதனால், அனைவரும் பீதியில் உள்ளனர்.


Tags : commissioners ,Chengalpattu ,commisioner ,Chengalpattu Muncipal ,Muncipal , Chengalpattu ,Muncipal commisioner ,covid positive
× RELATED தேர்தல் ஆணையர்கள் நியமனச்...