×

3 ஆயிரம் படுக்கை வசதியுடன் டி.டி.மருத்துவ கல்லூரியில் கொரோனா சிறப்பு வார்டு: கலெக்டர் நேரில் ஆய்வு

சென்னை : திருவள்ளூர் வட்டம் பட்டரை பெரும்புதூர் ஊராட்சியில் உள்ள டி.டி.மருத்துவ கல்லூரியில் கொரோனா வைரஸ் தடுப்பு  சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு  குடிநீர், கழிவறை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 3 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் அமைந்துள்ள இந்த மையத்தில் அனைத்து  ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வில் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை க.லோகநாயகி, வருவாய் கோட்டாட்சியர் ச.வித்யா, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) செந்தில்,  வட்டாட்சியர் விஜயகுமாரி மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags : Corona Special Ward ,DD Medical College ,Collector's Inspection ,district collector ,Speical ,corona ward , Speical corona ward ,3thousand Bed,district collector
× RELATED கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பு;...