×

காரில் மதுபானம் கடத்திய வழக்கறிஞர் பிடிபட்டார்

பெரம்பூர் : அயனாவரம் எம்டிஎச் சாலையில் நேற்று  மாலை அதிவேகமாக சென்ற கார் ஒன்று சாலையோரம் இருந்த தள்ளுவண்டி கடை மீது மோதியது. அப்போது, காரில்  இருந்த நபர் கீழே இறங்கி தள்ளுவண்டிக்காரருடன் வாய் தகராறில் ஈடுபட்டார்.  தகவலறிந்து அங்கு வந்த தலைமைச்செயலக காவலர் குடியிருப்பு போலீசார் காரில்  வந்தவரிடம் விசாரித்தபோது, செம்பியம் கென்னடி சதுக்கம்  பகுதியைச்  சேர்ந்த ரத்தினகுமார் (50)  என்பதும், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிவதும் தெரியவந்தது. அவரது காரை பரிசோதனை செய்தபோது, 100 உயர் ரக மது பாட்டில்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ரத்தினகுமார் மீது வழக்கு பதிவு செய்து, சொந்த ஜாமீனில்  விடுவித்தனர்.

*  அயனாவரம்-குன்னூர்  நெடுஞ்சாலையில் சந்தேகப்படும்படி கார் ஒன்று நிற்பதாக தலைமை செயலக காவலர் குடியிருப்பு போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காரை சோதனை செய்தனர். அதில், பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிலிருந்த 148 மதுபாட்டில் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஓட்டேரி எஸ்.வி.எம்.நகர், 1வது பிளாக்கை சேர்ந்த ராமச்சந்திரன் (32) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில், ஊரடங்கின்போது கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதற்காக டாஸ்மாக் கடைகளில் வாங்கி காரில் கடத்தி வந்தது தெரியவந்தது.


Tags : lawyer ,chennai , liquor ,police , chennai lockdown,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...