மன்னார்குடி, தஞ்சையில் வெட்டுக்கிளியால் நாற்றங்கால் சேதம்: விவசாயி தோட்டமும் பாதிப்பு

மன்னார்குடி : மன்னார்குடி, தஞ்சையில் வெட்டுக்கிளியால் நாற்றங்கால் சேதமானது. மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் விவசாயிகள் வயல்களை உழுதும், நாற்றங்கால் தயார் செய்தும், நேரடி நெல் விதைப்பு செய்தும் குறுவை சாகுபடிக்கு ஆயத்தமாகி வருகின்றனர். கோட்டூர் வட்டாரம் பெருகவாழ்ந்தான் பகுதியில் 500 ஏக்கரில் நடவுக்கு தயார் நிலையில் உள்ள நாற்றங்காலை வெட்டுக்கிளி சேதப்படுத்தியிருந்தது கண்டு விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து அவர்கள், வேளாண்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வேளாண்மை உதவி இயக்குநர் தங்கபாண்டியன் மற்றும் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல்  நிலைய பூச்சியியல்துறை உதவி பேராசிரியர் ராஜாரமேஷ் ஆகியோர் நேற்று ஆய்வு  மேற்கொண்டனர். இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் தெரிவித்ததாவது: இது பாலைவன வெட்டுக்கிளியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. வயல்வரப்பினை ஒட்டிய பகுதியில் சாதாரணமாக காணப்படக்கூடிய வெட்டுக்கிளியாகும். பயிரினை சேதம் செய்யக் கூடியது அல்ல.  இதனால்அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றனர்.

Related Stories:

>