×

சிவகாசியில் மாஜிஸ்திரேட் முன் மயங்கி விழுந்து கைதி சாவு

சிவகாசி : சிவகாசியில் ஷேக் அப்துல்லா (57) என்பவரிடம் நேற்று முன்தினம் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர். பின்னர், சிவகாசி ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் முன்பு இரவு போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது திடீரென ஷேக் அப்துல்லா மயங்கி விழுந்தார். சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் ஏற்கனவே  இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Prisoner ,magistrate ,Sivakasi , magistrate,Sivakasi ,prisoner ,dead
× RELATED சிவகாசி அருகே சரவெடி பதுக்கிய குடோனுக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை