×

இன்று முதல் 30ம் தேதி வரை ஓட்டல்களில் இனி பார்சல்தான்

வேலூர் : தமிழ்நாட்டில் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை ஓட்டல்களில் பார்சல்கள் மட்டுமே வழங்கப்படும் என்று தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கொரோனா தீவிரமடைந்துள்ளதால் தமிழக மக்களின் நலனை காக்கவும், வாடிக்கையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நலனை காக்கவும் தமிழகத்தில் உள்ள  அனைத்து உணவகங்களிலும் இன்று 20ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : hotels ,hotel owners , corona ,All hotels,parcel ,hotel owners assiciation
× RELATED சென்னையில் ஹோட்டல்களில் அமர்ந்து...