×

திருமழிசை சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைவு

சென்னை : முழு ஊரடங்கால், திருமழிசை தற்காலிக மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வரத்து குறைந்தது. திருமழிசை மார்க்கெட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வந்துகொண்டுள்ளன. மகாராஷ்டிராவில் இருந்து, வெங்காயம், மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து பூண்டு உள்ளிட்டவை வருகின்றன. இந்நிலையில் முழு ஊரடங்கால் நேற்று காய்கறி வரத்து குறைந்தது. நாள்தோறும் 300 லாரிகள் வரும்.  தற்போது அது 200 லாரிகளாக குறைந்தது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகே, காய்கறிகளின் வரத்து அதிகரித்து விற்பனை மீண்டும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Thirumazhisai ,Market,vegatables
× RELATED திருமழிசை காய்கறி சந்தையில் கலெக்டர் மகேஸ்வரி ஆய்வு